பின் செல்ல

பொய் சொல்லா மாணிக்கம்

இரா.மோகன்

வ.சுப.மா....வின் இளமை வாழ்க்கை பர்மா வின் தலை நகரான ரங்கூனில் ஒரு வட்டிக்கடையில் 'பெட்டி அடிப் பைய'னாகத் தொடங்கியது.'கை பழகுதல்" என்னும் வணிக வாழ்வின் தொடக்க நிலையில் இருந்து தொழில் கற்றுக் கொள்வதற்க்காக அவர் அங்கே சென்றிருந்தார்.அப்போது அவருக்கு வயது பதினொன்று. இரங்கூனில் இருந்து தொழில் பழகிய காலகட்டத்தில் வ.சுப.மா. இடையே இருமுறை தமிழகத்திற்கு கப்பலில் வந்து சென்றார்.அங்ஙனம் வரும்போது கைச்சங்கிலி,கழுத்து சங்கிலி ஆகிய இரண்டைத் தம் ஊதியத்தின் பயனாகக் கொண்டு வந்தார்.

ஒரு நாள் கடை முதலாளி அவரை அழைத்து,குறிப்பிட்ட இன்னார் வந்து கேட்டால்,'முதலாளி இல்லை என்று சொல்லி விடு!' என்று கட்டளை இட்டார்.வ.சுப.ம.வோ அதற்கு மறுமொழியாக 'முதலாளி வெளியில் சென்றிருந்தால் இல்லை என்பேன்;இருக்கும்போது கேட்டால்,எவ்வாறு இல்லை என்று சொல்வது?அப்படியெல்லாம் நான் பொய் சொல்ல மாட்டேன்!' என்று முதலாளியிடம் உறுதியாகக் கூறினார்.இதனால் கோபம் கொண்ட முதலாளி அன்றே அவரை வேளையில் இருந்து நீக்கிவிட்டார்.இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்."பொய் சொல்லா மாணிக்கம்" என்று பிற்காலத்தில் வ.சுப.மா.பெருமையோடு அழைக்கப்படுவதற்கு இந்த இளமை நிகழ்ச்சியே காரணமாக அமைந்தது எனலாம்.
"என் பதினெட்டாம் அகவையில் பர்மாவின் தலைநகரமான ரங்கூனில் கடைப்பணியாளராக இருந்தபோது வாய்மைக் குறிக்கோள் கண்டேன்" என வ.சுப.மா.வே ஓர் இடத்தில் இந்நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து எழுதிஉள்ளார்.('உரைப்பாயிரம்',தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழி மரபும்,மாணிக்கவுரை, LI.v. )

காந்தி அடிகளின் ஆளுமை வளர்ச்சிக்குத் தென்னாப்பிரிக்க வாழ்க்கை காரணமாக அமைந்ததுபோல், வ.சுப.மா.வின் ஆளுமை வெளிப்பாட்டிற்குப் பர்மா வாழ்க்கை காரணமாக அமைந்தது.

"வ.சுப.மாணிக்கம் "
சாகித்ய அகடெமி வெளியீடு

VSP Manickam